Wednesday, 25 February 2015

கோயில்களில் பலி பீடம் எதற்கு

கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்.....காமம், ஆசை, குரோதம் (சினம்), லோபம் (கடும்பற்று), மோகம் (கற்பு நெறி பிறழ்வு), பேராசை, மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை), மாச்சர்யம் (வஞ்சம்) ஆகிய எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
பெண்கள்
பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரத்தில் தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என ஐந்து அங்கங்களே நிலத்தில் படியக்கூடியதாக இருக்கவேண்டும்.
ஆண்கள்
அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிண்டு, மோவாய்(மோவாய் என்பது மூக்கும் வாயும் சேர்ந்தது), செவிகள் இரண்டு, மார்பு, முழந்தாள்கள் இரண்டு என்பதாகும்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.

திருப்பதி சிலையின் ரகசியங்கள்

எல்லா தெய்வ திருவுருகசிலைகளிலும் கையில் ஆயுதங்களோ அல்லது ஏதாவது முத்திரையோ இருக்கும்.
...
ஆனால், ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் வலது கையை கீழ் நோக்கி வெறுமையாக வைத்திருப்பார்.
இதன் தத்துவம் வாழ்வில் எதுவும் நிலையற்றது என்பதை குறிக்கும்.
*ஏழுமலையான் சிலை "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும்.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம்.
*திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள்.
ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.
*அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
* பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை.
*எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்.
ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.
*எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

அறிவியல் உண்மை

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா?
இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.
அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.
அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு தான்.

Tuesday, 24 February 2015

பூஜை அறை எப்படி அமைக்கவேண்டும்.


*ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது தென் மேற்கில்,அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்.
*கீழ்வீட்டிலும்,மாடியிலும் ஒரே குடும்பத்தவர் வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
*பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்.
*பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.
*தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
*பூஜை அறையில் காலஞ்சென்ற முன்னோர்களின் புகைப் படங்களை எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது.
*பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.
*இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அலமாரிக ளை பூஜை அறையாக பயன்படுத்தினால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை கதவு அல்லது திரைச்சீலையால மூடி வைக்க வேண்டும்.
*பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
*ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
*பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.

ஜபம் செய்வது எப்படி

ஜபம் செய்ய கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். 108 மணிகளை கொண்ட ஜபமாலையை வலக்கை நடுவிரல்மேல் வைத்து இஷ்ட மந்திரத்தை கூறி பெருவிரலால் தள்ளி கணக்கிடவேண்டும். ஜெபிக்கும் போது மானசீகமாகவும் துணியால் மூடியும் ஜபித்தால் வேண்டும். வீடுபேற்றை விரும்புவோர் மேல்நோக்கி தள்ளவேண்டும் .இவ்வுலக சுக போகங்களை விரும்புவோர் கீழ்நோக்கி தள்ளவேண்டும்.ஜபம் முடிந்த பிறகு அம்மாலையை அணிந்து கொள்ளலாம்.அல்லது ஒன்று தனியாக வைத்திருந்தால் உரிய இடத்தில் வைத்துவிடவேண்டும்.
* வெறும் விரல்களால் எண்ணி ஜபம் செய்தால் ஒரு பங்கு
பலனே ஏற்ப்படும்.
* விரல்களின் ரேகை கணுக்களை எண்ணி ஜபம் செய்தால்
8 பங்கு பலன் கிடைக்கும்
* சங்கு மணி கொண்டு ஜபம் செய்தால் 108 மடங்கு பலன்
கிடைக்கும்
* முத்துமணிகளால் 300 மடங்கு பலன்
* தாமரை மணிகளால் 1000 மடங்கும்
* ஸ்படிக மணிகளால் 30,000 மடங்கும்
* தர்ப்பை புல் முடிச்சுகளை எண்ணி ஜபம் செய்தால் கோடி
பங்கு பலன்
* இவைகளை விட சிறந்த உருத்திராக்க மணி
மாலையால் ஜபம் செய்தால் அளவிடமுடியாத கோடி
கோடியாய் புண்ணியபலன் கிடைக்கும் .

Monday, 23 February 2015

கோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள்

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

சிவ வழிபாடு செய்வது எப்படி

வேண்டுதல், பிராத்தனை, வழிபாடு என்பது ஒரு மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு. அந்த வகையில் சிவ வழிபாடு பற்றி பார்போம்.
முதலில் கொடி மரத்தை வணங்கி, பின் பலி பிடத்தை வணக்க வேண்டும். பலி பிடம் என்பது நந்தி தேவருக்கு பின் உள்ளது. இது அந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி யாரோ அவரின் பாத கமலனக்களை குறிக்கும் விதமாக தாமரை வடிவில் இருக்கும்.
இந்த பலி பிடம் பாசத்தை உணர்த்துகிறது. அதாவது மனித வாழ்வில் இயல்பான காம, குரோத, லோப, மோக, மத மாச்சரியங்களை பலி கொடுப்பதாக உறதி செய்து கொள்ள வேண்டும்.
நமது ஆணவம், அகங்காரம் பற்றுகளை பலி இட்ட பின்னரே தெய்வ சித்தி கிட்டும். கோவிலின் எட்டு மூலைகளிலும் அஷ்ட திக் பாலகர்களான இந்திரன் அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், எசாணன் முதலியவர்களுக்கு தலைமை பிடமாக இருப்பது பலி பிடமாகும்.
கொடி மரத்திற்கு அடுத்து பலி பிடத்தை வணங்கி நந்தி தேவரிடம் வருகிறோம்.
யார் இந்த நந்தி?
உத்தமமான முனிவர் கிலாதர். அவர் பத்தினி சித்ரவதி அம்மையார். இந்த முனி தம்பதியரின் தவப்பயனால் கைலைநாதன் ஸ்ரீ சைலம் போக என்று அன்பு கட்டளை இட்டார்.
பரம்பொருளின் உத்தரவு படி ஸ்ரீ சைலம் வந்தார்கள். புத்திர பாக்கியம் வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள். கடும் தவம் புரிதார்கள்.
கருணை கடலான சிவபெருமான் அருளால் சூரியனை போன்ற பிரகாசமான மகன் பிறந்தான். அன்னை சிதிரவதி அம்மையார் பாசத்தை பொழிந்து மகனை சீராட்டி தாலாட்டி வளர்த்தார். சகல கலைகளையும் தந்தை கிலாதர முனிவர் கற்பித்தார்.
வளர்ந்து வாலிபத்தை தொட்டார் நந்தி. எல்லா தாயாருக்கும் உள்ள கவலை சித்ரவதிக்கும் வந்தது. பருவத்தே திருமணம் செய்ய ஆசை பட்டாள். ஆனால் நந்தி பகவானோ தவ கோலம் பூண்டார்.
பெற்று வளர்த்து சீராட்டி பாராட்டி வளர்த்த தாய் தந்தையரை வணங்கி.... என்னை ஆசிர்வதியுங்கள். நான் பரம் பொருளை காண கடும் தவம் செய்ய போகிறேன் என்றார் ரிஷி குமாரன் நந்தி.
காலம் போடும் கணக்கை புரிந்து கொண்ட முனி தம்பதிகள் ஆசிர்வதித்தார்கள். எல்லா வளமும் பெற்று மங்கலம் பெருகுக என்று வாழ்த்தினார்கள்.
விடை பெற்ற நந்தி அக்கினியில் பல ஆண்டுகள் நின்று கொண்டே தவம் செய்தார். மெய் வருத்த செய்த தவத்தின் பயனாக பரமேஸ்வரன் நேரில் வந்தார்.
மகனே... எனது ஆணை எங்கும் நிறைத்தது. அதுபோல் இன்று முதல் உனது அதிகாரமும் எங்கும் நடக்கும். அதனால் அதிகார நந்தி என்று சொல்லபடுவாய் என்று ஆசிகள் கூறினார்.
நந்தி தேவன் அதிகார நந்தி என்று பெயர் பெற்ற பின்னாலும் கடும் தவம் செய்தார். அந்த தவத்தின் பயனாக மீண்டும் வரங்கள் தந்தார்.
அனைத்து பூதங்களுக்கும் உன்னை தலைவனாக ஆக்குகிறேன். சிவ ஞானத்தை உலகிற்கு போதிக்கும் ஆசிரியனும் நீ. எனக்கு வாகனமாகவும், கைலயில் காவல் தெய்வமாகவும் நீயே இருப்பாய். அதனால் என்னை போலவே நீயும் நித்தியனாக இருப்பாய் என்று வரமளித்தார்.
நந்தி சைவர்களுக்கு குரு. நந்தி என்றாலே எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பார் இருப்பவர் என்று பொருள். இவரின் அனுமதி பெறாமல் சிவ தரிசனம் செய்வது தவறு. அப்படி வணக்கினால் சிவனருள் கிட்டாது.

பொதுவாக சிவ ஆலையத்தில் நந்தி தேவர் எப்பொதும்சிவனை துதித்து வணங்கியபடியே இருப்பதால், சிவனுக்கும் நந்திக்கும் இடையே செல்வதை தவிர்க்க வேண்டும். நந்தி தேவர் வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்வதே பிரதானமாக இருக்கிறது.
திரயோதசி அன்று மாலை சூரிய அஸ்த மனத்திருக்கு முன்னதாக ஒன்னரை மணி நேரம் பிரதோஷ காலமாக கருதபடுகிறது. அந்த நேரத்தில் தான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே, அண்டத்தின் மீது நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார்.
இவ்வேளையில் உலகில் உள்ள அனைத்து சீவன்களும் சிவபெருமானுக்குள் ஒடுங்கி விடுவதாக புராணம் சொல்கிறது. பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும் சிவனையும் துதிப்பது 1000 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
கல்வி, செல்வ வளம் பெற்று, கடன் தொல்லை, வறுமை, மனக்கவலை நீங்கி குறிப்பாக மரணபயம் அற்று வாழ பிரதோஷ வழிபாடு சிறப்பு. நந்தி தேவர் மந்திரம்.
தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமைகி
தன்னோ நந்தி பிரசோதயாத்
நந்தி தேவரை வணங்கி அனுமதி பெற்று சிவதரிசனம் செய்த பிறகு சண்டிகேசுவறரை வணங்க வேண்டும்.
யார் இந்த சண்டிகேசுவரர்?
இவர் ஒரு சிவனடியார். சிவ சன்னதியில் சிறு இடைவெளி விட்டு இடது புறத்தில் சிறிய ஆலயம் அமைக்க பட்டிருக்கும். இவருக்குயென தனியாக மாலையோ நெய்வேதியமோ கிடையாது.
மூலஸ்சாணத்தில் சார்த்திய மாலையும், மிதமுள்ள நெய்வேத்தியமும் தான் இவருக்கு உரியது.
எப்போதுமே தவ நிலையில் இருந்து சிவ பெருமையை நெஞ்சுருக பிரதித்து கொண்டிருப்பார். அவரை வணக்கும் பொது சிவனருள் பரிபோரனமாக கிடைக்க வேண்டும் என்று இவரிடம் கேட்க வேண்டும்.
பின் கோவில் பிரகாரத்தை மூன்று மமுறை சுற்றி கொடி மரத்திருக்கு முன்னாள் நமஸ்காரம் செய்தால் சிவதரிசனம் நிறைவு பெறுகிறது.

Sunday, 22 February 2015

அகோரிகள்

அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
திரிவேணி சங்கமம்
திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாகை) நடைபெறுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண)கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண)கும்பமேளா அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.
வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்)இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக,புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.
வானியலும் கும்பமேளாவும்
கும்பமேளாத் திருவிழா பிரயாக்கில் (அலகாபாத்) மகா மாதத்தில் நடைபெறுகின்றது. அதாவது (ஜனவரி / பெப்ரவரி). பலர்அமாவாசை நாளில் நீராடுவது மிகுந்த பலனை அளிப்பதாக நம்பிக்கையுடன் உள்ளார்கள். வியாழன் கோள் ரிசப இராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மகர இராசியில் இருக்கின்றது. இவ்வமைப்பே அமாவாசை நாளாகும்.
ஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் (பெப்ரவரி / மார்ச் / ஏப்ரல்), சூரியன் மேச இராசியில் செல்லும் பொழுது சந்திரன் தனுசு இராசியிலும் வியாழன் கும்ப இராசியிலும் உள்ள போது கும்பமேளா நடைபெறுகின்றது.
உஜ்ஜெயின் பகுதியில் இவ்விழா வைகாசி மாதத்தில் அதாவது மே மாதத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய கோள்கள் துலா ராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மேச இராசியிலும் வியாழன் கோள் சிம்ம இராசியிலும் இருக்கும்.
நாசிக் பகுதியில் நடைபெறும் கும்பமேளாவானது ஸ்ரவணா மாதத்தில் அதாவது ஜூலையில் சூரியனும் சந்திரனும் கடக ராசியில் உள்ளபோது வியாழன் கோள் விருட்சிக இராசியில் உள்ள பொழுது நிகழும்.
மேலும் ஒருவகை போதைச்சுவை கொண்ட இனிய பானம் விண்ணுலகு அதாவது சொர்க்கம் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து பூமியில் விழுகின்றது எனக்கூற்றுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புராணக் கூற்றுகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக் பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது.
கும்பமேளா
ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. இது அலகாபாத்திலும் ஹரித்துவாரிலும் மட்டும் நடைபெறும்.
நாகா சாதுக்கள்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் முழு (பூர்ண)கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்தபடி நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஹர ஹர மகாதேவா என்று கூவி மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே ஊர்வலமாக வந்து கடும் குளிரிலும் புனித நீராடுவர்.
கும்பமேளா 2003
2003 ஆம் ஆண்டில் நாசிக்கில் ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7 ஆம் திகதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சன நெரிசல்கள் காரணமாக 28 பெண்களும் 11 ஆண்களும் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோதாவரி நதிக் கரையில் கூடிய மக்கள் கூட்டம் அங்கு நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். சாதுக்கள் பின்னர் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்டம் அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட அந்நாணயமானது அரிய சக்திகளை உடையதாக மக்கள் இன்றளவிலும் கருதுவது குறிப்பிடத்தக்கது.

Friday, 20 February 2015

நவக்கிரக நைவேத்தியம்

சூரியன் – சர்க்கரைப் பொங்கல்
சந்திரன் – நெய் பாயசம்
செவ்வாய் – சம்பா சாதம்
புதன் – பால் சாதம்
குரு – தயிர் சாதம்
சுக்ரன் – வெல்ல சாதம்
சனி – எள் சாதம்
ராகு – சித்ரான்னம்
கேது – சித்ரான்னம்

Thursday, 19 February 2015

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்

1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை.
அதனை நான் பதிவு செய்வது எப்படி?
இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள்,
மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை
தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,Direct orate of Cencus Operations, Tamilnadu,
E-Wing, Third Floor,
Rajaji Bhavan,Besant nagar,
Chennai-600 090,
Phone:91-44-249 12993.
Mail: dco-tam.rgi@nic .in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து,
அது கிடைக்கப் பெறாமல் இருந்தால்,
அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?*
SMS ல் UID STATUS <14 digit EID>
என டைப் செய்து 51969 என்ற
எண்ணுக்கு அனுப்பவும்.
*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம்
போன் செய்யவும்.
https://resident.uidai.n et.in/ check-aadhaar-st atus
இணைய தளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http:// eaadhaar.uidai.g ov.in/
என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம்
(Download) செய்து கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார்
பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமான
https: //resident.uidai.n et.in உள் செல்லவும்.
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும்.
ஆதார் பதிவின் போது அளிக்கப்பட்ட பெயர்
மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP
(ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும்.
பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில்
பதிவு செய்யவும்.
பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை
உங்கள் கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?
பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும்
கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமான
https: // resident.uidai.net.in
உள்சென்று செய்யலாம்.
*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை
சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட
UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால்
மூலம் அனுப்பலாம்.
முகவரி:
UIDAI,Post box No.:10,Chhindwara,
Mathya Pradesh- 480001, INDIA .
அல்லது
UIDAI
Post Box No:99
Banjara Hills,
Hyderabad - 500 034,
INDIA.
மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும்
தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்

18 சித்தர்களின் கோவில்கள்

திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை

Wednesday, 18 February 2015

ஏழு வகையான லிங்கங்கள்

நாம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலங்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும்.
• சுயம்புருவ லிங்கம் - தானாக உண்டானது.
• தேவியகம் லிங்கம் - அம்பிகை வழிபட்டது.
• தைவிகம் லிங்கம் - தேவர்கள் வழிபட்டது.
• மானுஷம் லிங்கம் - மனிதர்கள் வழிபட்டது.
• ராட்ஸச லிங்கம் - அசுரர்கள் வழிபட்டது.
• ஆரிஷம் லிங்கம் - ரிஷிகள் வழிபட்டது
• பாணலிங்கம் - பாணாசுரன் வழிபட்டது.

Tuesday, 17 February 2015

நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.
காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார்.

பெருமாள் கோவில்களில் தீர்த்தமும் ,சிவாலயங்களில் விபூதியும்

வாழ்க்கையின் உயிர்த்தன்மைகளைக் கட்டுவது வைணவம்.நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு)ஆதாரமாக உள்ள தீர்த்தம்,பிரசாதமாகக் கொடுக்கபடுகிறது.
வாழ்க்கையின் எல்லையை தொட்டுக் காட்டுகிறது சைவம்.எவ்வளவு சம்பாதித்தாலும் ,எவ்வலு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் ஒன்றும் இல்லை.பஸ்மம் சாம்பல்தான் என்கிற நிலையாமையை உணர்த்தவே சிவாலயத்தில் விபூதி பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

கோயிலுக்கு ஏன் போகனும்?

கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்போது, அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும். எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்ட மும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும். 

கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.?

மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.
>> இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.
>> தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.
>> இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில்,மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.
1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.
5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?
8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.
9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.
11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? 

Sunday, 15 February 2015

ஆன்மீக ரகசியங்கள்

ஆன்மீக ரகசியங்கள்  1
ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் காராமணிப் பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிக் கீழே உள்ள மந்திரத்தை 7 தடவை ஜெபித்து அந்தக் காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டிகே கிளம்பிச் செல்ல காரியத்தடைகள் நீங்கி வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.
இதை செய்த வெளியூர்,வெளிநாடு பயணம் கிளம்ப வெற்றியுடனும் பாதுகாப்புடன் திரும்பலாம்.
மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ ||
--------------------------
ஆன்மீக ரகசியங்கள் :2. செல்வவளம் பெற ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா பிரயோகம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் குளித்து வெண்ணிற ஆடை அணிந்து சூரியனைப் பார்த்தபடியே ஹ்ரீம் என்று 108 தடவை ஜெபிக்கவேண்டும்.ஜெபத்திற்கு மாலைகள் அவசியம் இல்லை.பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்படிகம் அல்லது ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தவும்.
ஜெபித்து முடித்த பின் வெண்சந்தனப் பொடி அல்லது வெண்சந்தனக் கட்டையை அரைத்து ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் அணிந்து கொள்ளவும்.பின் மற்ற நாட்களில் ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் வெண்சந்தனம் அணிந்து வரவும்.இதை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்து வர செல்வம், புகழ் இவற்றில் படிப்படியாக உயர்ந்த அந்தஸ்தை அடையலாம் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
-------------------------
ஆன்மீக ரகசியங்கள் colonthree emoticon (தாந்த்ரீக பரிகாரம்) அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்
ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன் நின்று கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
------------------------------------
ஆன்மீக ரகசியங்கள் :4 சர்வ க்ரஹ தோஷ நிவாரண பரிகாரம்!!!
செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
மந்திரம் :-
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||
------------------------------
ஆன்மீக ரகசியங்கள்:5 செல்வம் சேர
செல்வம் சேர
கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர் ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.
---------------------------------
ஆன்மீக ரகசியங்கள்:6 வீட்டில் நிம்மதி நிலவ ,துரதிர்ஷ்டம் நீங்க
ஒரு பௌர்ணமி அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும்.பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும்.பின்னர் அதைக் கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும் வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றவும்.முடித்தபின் ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் களற்றிவிட்டு வெறும் காலுடன் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று 11 தடவை ஜெபித்து மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம்,துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விடவும். இதன் மூலம் வீட்டில் வளமும்,நலமும்,மகிழ்ச்சியும் உண்டாகும்

பிரதோஷ வழிபாடு

நன்றி தினத்தந்தி :
சிவபெருமானையும், நந்திதேவரையும் வழிபாடு செய்யும், பிரதோஷ பூஜையானது சிறப்பு வாய்ந்தது. இந்த பிரதோஷ வழிபாடு அனைத்து கிழமைகளிலும் வரும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் தனிச்சிறப்பு கொண்டது. எந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட்டுக்கு எப்படிப்பட்ட பலன் என்பதைக் காணலாம்.
திங்கள் – சுப மங்களத்தை கொடுக்கும்.
செவ்வாய் – நல்ல சிந்தனை தரும். அசுவமேத யாக
பலன் தரும்.
புதன் – புத்திபேறு கிட்டும். கல்வியில் சிறந்து
விளங்கலாம்.
வியாழன் – குருவருளோடு இறையருள் கிட்ட,
பித்ருக்கள் உதவுவர்.
வெள்ளி – எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகள் விலகுவர்.
சனி – மகாபிரதோஷ நாள். பதவி உயர்வு வரும்,
அஷ்டலட்சுமி ஆசி கிட்டும்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதனால் கிடைக்கும் பலன்கள் :

நன்றி தினத்தந்தி :

இந்திர லிங்கம் – புதிய வேலை, பணி மாற்றம், பதவி 
உயர்வு கிடைக்கும்.
அக்னி லிங்கம் – கற்பு, சத்தியம், தர்மம் தலை காக்கும்.
எம லிங்கம் – எம பயம் நீங்கி, நீதி வழுவாமல்
வாழலாம்.
நிருதி லிங்கம் – தோஷங்கள், குழந்தை இல்லாமை,
சாபங்கள் நிவர்த்தியாகும்.
வருண லிங்கம் – ஜலதோஷம், சிறுநீரக வியாதி,
சர்க்கரை வியாதி குணமாகும்.
வாயு லிங்கம் – காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய்
நீங்கும்.
குபேர லிங்கம் – ஆக்கப்பூர்வமாக தரிசித்தால்
கோடீஸ்வரர் ஆகலாம்.
ஈசானிய லிங்கம் – ஏழரை சனியில் இருந்து
விடுபடலாம்.

அசைவ உணவு சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாது எனக் கூறுவது ஏன்?


பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு. தயிர் அதிகமாக
சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற
உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக
சாப்பிட்டால் கோபம் வருவதும்
இதற்கு உதாரணமாக கூறலாம்.
அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம்
எடுத்துக் கொள்ளும் என்பதால்
அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும்.
பொதுவாக கோயிலுக்குச் செல்லும்
போது சுத்தமாகச் செல்ல வேண்டும்
என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல,
மனதிற்கும் பொருந்தும்.
மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர்
சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள்
செல்லும் போது அந்த சக்திகளை உணரக்
கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.
பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும
சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும்
தன்மை படைத்தவை.
எனவேதான், கோயிலுக்குச் செல்லும்
போது எளிமையான உணவை மிதமான அளவில்
உண்டு, மனதில் உற்சாகத்துடன்
இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என
முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர்
கோயிலுக்குச் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4
மணி நேரத்திற்குப் பின்னர்
குளித்துவிட்டு கோயிலுக்குச்
செல்வது நல்லது.

எளிய பரிகாரங்கள்

.
வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்
கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,
கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்
நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]
இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,
செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, .
நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்
தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,
மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில்
தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.
கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,
மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்
வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும்
கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,
திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்
குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு
எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ,ஏதும் பூதகண
சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி
12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு
சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.
21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி
வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில்
தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி
சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,
திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,
பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்
தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்
நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோவிலில் கால பைரவரையும்,
விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும்
வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை
21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,
நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும்.
இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும்
சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய்,
மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத
யாகங்களை செய்த பலனை பெறுவார்கள்.
அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு
காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால்
எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு
தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால்,
விரைவில் திருமணம் நடை பெறும்.
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு
அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது.
இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான
அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம்.
ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள்
துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட
நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில்
துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு
ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு
சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து
27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி,
குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில்
வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை
சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு
எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட
பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று
சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு
செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட
மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று
முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி
அர்ச்சனை செய்யவும்.
ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள
இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில்
தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில்
காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால்
விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து
மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து
நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில்
கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை
சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட
சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல்,
பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில்
பூஜை நடக்க உதவுதல்,
அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்-
ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம்
செய்ததற்குச் சமம்.
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க ,
வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி
வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற
பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா
பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
எத்தகைய கிரக தோசமானாலும் தினமும்
சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம்
செய்வது மிக, மிக நன்மை தரும்.
வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால்
குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி
நிவர்த்திப் பரிகாரங்கள் -
மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது
ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது,
லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது,
ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும்.
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து,
அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால்
நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று
அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை
எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.
இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில்
தீர்த்தமாட இயலாதவர்கள் ,கடல் நீரின் ஒரு பகுதியாக
இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய
கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள்,
தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.
அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்
பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர்
ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம்
செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை,
மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி,
எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள்
உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த
அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.

ஆலய தவறுகள்:-


கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் கோயில் என்னும் சொல் 'கோ' + 'இல்' எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே 'கோ' என்பது இறைவனையும், 'இல்' என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே 'கோயில்' இறைவன் வாழுமிடம் என்னும் பொருள் தருகிறது. கோயில் என்பதற்கு ஆலயம் என்றொரு பெயரும் உண்டு. ஆலயம் என்பது ஆன்மா லயப்படுகின்ற இடம் என்பதாகும். எனவே அத்தகைய ஆலயத்தினுள் சில செய்ய தகாத காாியங்களும் உள்ளது.
அவையான,
1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது
4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது
6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
21. மூர்த்திகளைத் தொடுதல்.
22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
24. எச்சில் துப்புதல்
25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்
28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
29. நெற்றிக்கு விபூதி இடாமை
30. சிகை (குடுமி) இல்லாமை
31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்
32. தலைமயிரை ஆற்றுதல்
33. மூக்கைச் சிந்துதல்
34. தும்முதல்
35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்
36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்
37. பேசுதல்
38. வேகமாக வலம் வருதல்
39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்
42. படுத்தல்
43. உறங்குதல்
44. சிரித்தல்
45. அழுதல்
46. அடித்தல்
47. சண்டையிடுதல்
48. எச்சில் துப்புதல்
49. மலஜலம் கழித்தல்
50. விளையாடுதல்
51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்
52. தாம்பூலம் தரித்தல்
53. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாத ரக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
54. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
55. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
56. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
57. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
58. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
59. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்
60. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
61. பொய் பேசுதல்
62. உரத்துப் பேசுதல்
63. வாதம் செய்தல்
64. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
66. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்
67. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்
68. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்
69. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்
70. நர ஸ்துதி செய்தல்
71. பிறரை இழிவு படுத்துதல்
72. அபானவாயு விடுதல்
73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
74. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்
75. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்
76. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்
77. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
80. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்
81. தற்பெருமை பேசுதல்
82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்.