சென்னை, டிச.14: இந்தியாவில் ஆறுகள், அணைகள் ஆகியவற்றை ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் விவசாயம் தொடர்பான மாநாடு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைக்கு தண்ணீர் காரணமாக இருக்கக் கூடாது. நதி நீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் அதை நம் நாடு தாங்காது.நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை தேசிய அளவிலான அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதேபோல், நாட்டின் நீர் ஆதாரத்தையும் நிர்வகிக்க தேசிய அளவிலான அமைப்பை உருவாக்க வேண்டும்.அமெரிக்காவில் உள்ள மிசிசிபி ஆறு அந்த நாட்டில் உள்ள 32 மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே அங்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடந்த 200 ஆண்டுகளாக மிசிசிபி ஆற்று நீர்ப் பங்கீடு, பராமரிப்பு அந்த நாட்டு ராணுவத்தின் பொறுப்பில் உள்ளது.இப்போது நம் நாட்டில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க நீர் ஆதாரங்களை தேசியமயமாக்க வேண்டும். ஆறுகள், அணைகளை ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் நமது நாடு அமைதியாக வளர்ச்சிப் பாதையில் செல்லும்.தனிபட்ட, அரசியல் கட்சிகளின் நலன்களை விட தேசிய நலனே முக்கியம் என்ற உணர்வு நம் அனைவரிடமும் வேண்டும்.உணவு உற்பத்தி இருமடங்காக வேண்டும்: இந்தியாவில் இப்போது 235 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்போதுள்ளதை விட குறைந்த அளவிலான நிலம், தண்ணீர், ஆள்பலம் ஆகியவற்றைக் கொண்டு உணவு உற்பத்தியை 2020-ம் ஆண்டுக்குள் இருமடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது.நாடு முழுவதும் 170 மில்லியன் ஹெக்டேரில் உணவு தானியங்கள் பயிரிடப்படுகின்றன. மக்கள் தொகைப் பெருக்கம், விளை நிலங்களை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் 2020-க்குள் இந்தப் பரப்பளவு 100 மில்லியன் ஹெக்டேராக சுருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்போதுள்ள அதே ஆறுகள், நீர்நிலைகள், பிரச்னைகளைக் கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நமது நாட்டில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் 60 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர்.மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான்.புதிதாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு மதிப்பு கூட்டு சேவையை வழங்க வேண்டும்.குறைந்த அளவிலான நீர், ஆள்பலம், நிலம் ஆகியவற்றைக் கொண்டு அதிக உற்பத்தியைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நீடித்த வளர்ச்சிக்கு நீராதாரம் மிகவும் முக்கியமாகும்.மழைக் காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் வெள்ள நீரை ஆற்றுநீர் இணைப்பின் மூலம் பாசனத்துக்காகப் பயன்படுத்தலாம். வெள்ள நீரில் 5-ல் ஒரு பங்கு நீரைக் கொண்டு, சிறிய கால்வாய்கள் மூலம் இந்தியா முழுமைக்கும் பாசன வசதியை ஏற்படுத்தலாம் என்றார் கலாம்.இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயத் துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் டி.டி.அசோக், கூட்டமைப்பின் விவசாய அமைப்பின் இணை தலைவர் எஸ்.சந்திரமோகன், மாநாட்டுத் தலைவர் அருண் ஜாவ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி தினமணி டிச.14:
No comments:
Post a Comment